World Tamil Blog Aggregator Thendral: எப்படி காப்பாற்ற போகிறோம்?

Thursday 23 June 2016

எப்படி காப்பாற்ற போகிறோம்?

எப்படி காப்பாற்ற போகிறோம்?

 என்ன செய்யறதுன்னே தெரியல...அவன சமாளிக்க முடியல...கொஞ்ச நாள் ஒழுங்கா ,சமத்து பிள்ளையா இருக்கான்..அப்ப பார்க்கும் போது அவன போல நல்ல பிள்ளை யாருமே இல்லன்னு தோணும்.

 நாலு நாளா அவன் படுத்துற பாடு தாங்க முடியல.புதுசா வாங்கிக்கொடுத்த வண்டிய காணும்..என்னாச்சுன்னு தெரியல..

 அவனே சம்பாரிச்சு வாங்குன பத்தாயிரம் ரூபாய் செல்லை ஆயிரம் ரூபாய்க்கு அடகு வச்சுட்டான்.

 இரண்டு முறை மறுவாழ்வு மையத்திற்கு கூட்டி போயிட்டு வந்துட்டோம்...இப்ப கூட வண்டிய எடுத்துட்டு போயிட்டான் .எப்படி வருவான்னு தெரியல...

 என்ன பண்றதுன்னு தெரியலன்னு என் தோழி கலங்கிய போது .. 

இவர்களைப்போல் சொல்ல முடியாது கலங்கி நிற்கும் பெற்றோர்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டு உள்ளதை உணர முடிகின்றது.

 இதுபோல் திருமணம் ஆகாத மதுவிற்கு அடிமையான ஒரு சமூகம் உருவாகியுள்ளதை எப்படி மாற்றப்போகின்றோம்...

இவர்களால் உருவாகும் அடுத்த தலைமுறை எப்படி இருக்கும்னு அடிவயிற்றை பிசையும் வலியை உணர்ந்தேன்..

 இவர்களை திருமணம் செய்து கொள்ளும் பெண்களின் கதி?

 நம் குழந்தைகள் நம் கையை விட்டு போய்விட்டார்களோ..

எங்கு தோற்றுப்போனோம்?

 பார்வையாளர்களாய் அநீதிகளைக்கண்டும் காணாதது போல் செல்வதன் விளைவை நாம் தான் அறுவடை செய்கின்றோம்..

6 comments :

  1. முயல்வோம் முடியும்

    ReplyDelete
  2. குடி பலரது குடியை கெடுத்துக் கொண்டிருப்பது மறுக்க முடியாத உண்மை!

    ReplyDelete
  3. இவ்வாறான பல நபர்களை சந்திக்கவேண்டிய சமூகத்தில் வாழும் அவல நிலையில் உள்ளோம். என்ன செய்வது?

    ReplyDelete
  4. இப்படி ஆவது சமூக சீரழிவினால்தான். சமூகத்தை எப்படி சீரழிவிலிருந்து மீட்பது? புரியாத பிரச்சினை.

    ReplyDelete
  5. எத்தனை சீரழிவுகள் நம்மைச் சுற்றி.... குடியிலும், போதையிலும் வீழும் இளைஞர்கள்..... :(

    ReplyDelete
  6. நல்ல ஆதங்கம் தான். ஆனால் இதற்கான தீர்வு பெற்றோர்களிடம் தொடங்கி, பள்ளிகள் வழி வளர்ந்தால் சாத்தியம் உண்டு. அரசும் ஒரு சில விஷயங்களில் சட்டத்தை வலுவாக்க வேண்டும்.

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...