World Tamil Blog Aggregator Thendral: ஜன்னல் திறந்தவன் எட்டிப்பார்க்கப்படுகிறான் கவிதை நூல் -வைகறை

Monday 9 February 2015

ஜன்னல் திறந்தவன் எட்டிப்பார்க்கப்படுகிறான் கவிதை நூல் -வைகறை

ஜன்னல் திறந்தவன் எட்டிப்பார்க்கப்படுகிறான்   கவிதை நூல் -வைகறை

வெளீயீடு பொள்ளாச்சி இலக்கிய வட்டம்.ரூ50

வைகறை முகநூல் நண்பராகி தற்போது  புதுக்கோட்டையில் ஆசிரியராகப்பணி புரிகின்றார்...நந்தலாலா.காம் என்னும் இணைய இதழையும் நடத்தி வருகின்றார். ”ஒரிஜினல் தாஜ்மகால்,”நிலாவை உடைத்தக்கல்”ஆகிய இரண்டு கவிதை நூல்களைத்தொடர்ந்து இந்நூலை வெளியிட்டுள்ளார்.எனது ஒரு கோப்பை மனிதம் நூலுக்கு அழகான மதிப்புரை எழுதிதந்தவர்.சிறந்த ஆசிரியர்.சென்னை புத்தகக் கண்காட்சியில் பொள்ளாச்சி இலக்கிய வட்டம் வெளீயிட்ட நூலகளை டிஸ்கவரி பதிப்பகத்தில் வாங்கினேன்..நிதானமாக படிக்க எண்ணி இத்தனை நாட்களுக்குப்பின் வாசித்தேன்...

தனது மகன் ஜெய்குட்டிக்கும் இவருக்கும் ஊடாடும் பாச வலையில் நம்மையும் வீழ்த்தி நம் குழந்தைகள் மட்டுமல்ல...பார்க்கும் குழந்தைகளையெல்லாம் ஜெய்குட்டியின் மனநிலையில்,ஒரு மகனை ரசித்து வளர்க்கும் தந்தையின் மனநிலையில் அழைத்துச்சென்று விடுகின்றார்... ஜெய்குட்டியுடன் இணைந்து பறந்து கொண்டிருக்கின்றேன் படித்து முடித்தபின்..இங்கு இவர் கவிஞராக வெற்றி பெறுகின்றார்...இவரது” நிலாவை உடைத்தக்கல்” நூலைப்பற்றி தோழர் எட்வின் சிலாகித்து சொல்வார்...அதற்கு சற்றும் குறைந்ததல்ல இந்நூலும்..

குழந்தைகளை வானவில்லாக,செல்லக்குட்டியாக ,குட்டி தேவதையாகக் காணும் இவரின் பார்வையில் ஜெய்குட்டியின் மூலம்

தனது பால்யத்தை தரிசனம் செய்கின்றார்.
வனம் புக குழந்தை அஞ்சி அடுத்தப்பக்கத்தை புரட்டுவதாக ஆரம்பிக்கும் கவிதை நம்மை சற்று வனவாசலில் நிற்கவைத்து நிகழ்காலத்தில் நடக்க வைக்கின்றார்.

அடம் பிடித்து வாங்கிய பறவையை சுதந்திரமாகப் பறக்கவிட்டு சிரிக்கின்ற சிரிப்பே சிறகாக மாறி பறப்பதை உணரவும் வைக்கின்றார்.

காகித வண்ணத்துப்பூச்சிக்கும் வானத்தை வழங்கி தன் ஜெய்குட்டியிடம் கொடுக்கும் அழகு அருமை

வானத்தை வழங்கலாம்
----------------------------------------
அந்த வண்ணத்துப்பூச்சியின்
இறகு நிறைய தூசி
அவ்வப்போது வந்து கொஞ்சம்
துடைத்துப்போகிறது
இறகில் அமரும் ஈ

புதிதாய் வருபவர்கள்
பாராட்டியபிறகு
அது
உறங்கத் தொடங்குகிறது

சுவரையே
 வானமென நினைத்து
ஒட்டப்பட்ட அதற்கு
சுவரே சிறையாய்

என்றாவது ஒரு நாள்
சலிப்பின் உச்சத்தில் என்னால்
பிடுங்கி எடுக்கப்படும் அதற்கு
நான் வானத்தை வழங்கலாம்
ஜெய்குட்டியிடம் விளையாடக்கொடுத்து.

என்ற கவிதை நுண்மையான ரசனையை மனதினில் ஓட விடுவதைத் தடுக்க முடியாது யாராலும்....

இரவை பகலாக்கும் ஒளி வெள்ளத்தின் ஊடுறுவலில் மெழுகு வர்த்தியினை அணைத்து இரவை இரவாக்குவதாகக் கூறுகின்றது
இரவு மலர்க்கவிதை...

“மின்சாரமற்ற இரவு
மெழுகுவர்த்தியை
ஊதியணைத்தவன்
இரவாக்குகிறான்
இரவை”

குழந்தையை இரசிக்காதவர் யாரும் இருக்க முடியுமா..அதுபோல.இந்நூலை
ரசிக்காமல் யாரும் கடந்து போக முடியாது...மனதினில் ஊடுறும் மென்மையான உணர்வை வழங்கி நம் மனதை கொள்ளை கொள்ளும் இக்கவிதை நூலைப் படித்தவர்கள் பாக்கியவான்கள்....

ஜன்னல் திறந்தவன் எட்டிப் பார்க்கப்படுகிறான்  ----வைகறை 
பொள்ளாச்சி இலக்கியவட்டம்
பில்சின்னாம்பாளையம்
சமத்தூர்-642 123
பொள்ளாச்சி
90955 07547

7 comments :

  1. பாக்கியவான் ஆகிறேன்... நன்றி...

    ReplyDelete
  2. நானும் பாக்கியவான் ஆக முயற்சிக்கின்றேன் சகோதரியாரே
    தம +1

    ReplyDelete
  3. நூல் பற்றிய பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  4. நான் இன்னும் முழுதும் படிக்கவில்லை ஆனால்
    அவரது நிலவை உடைத்த கல் அருமை இதில்ஆரம்பமே
    அசத்தல்தான்.தோழி.

    ReplyDelete
  5. அருமையான கவிதை நூலைப்பற்றி அருமையான அறிமுகம்.

    ReplyDelete
  6. அருமையான நூலறிமுகத்திற்கு நன்றி.

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...